shadow

vijay and shruthiஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து நடிக்க இருக்கும் படத்தை சிம்புதேவன் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் விஜய்யுடன் நடிக்க ஸ்ருதிஹாசன் சில நிபந்தனைகள் விதித்ததால் விஜய் மற்றும் சிம்புதேவன் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிம்புதேவன் இயக்கவிருக்கும் படத்தில் தந்தை மகன் என இருவேடங்களில் விஜய் நடிக்கவிருக்கிறார். இதில் தந்தை வேடத்திற்கு ஹன்சிகாவும், மகன் வேடத்திற்கு ஸ்ருதிஹாசனும் ஜோடி சேருகின்றனர். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் ஏற்கனவே பாலிவுட்டில் நடிக்க மூன்று படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதுமட்டுமின்றி தமிழில் விஷாலுடன் “பூஜை” மற்றும் தெலுங்கில் இரண்டு படங்கள் என நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் படத்திற்கு அவர் கேட்ட தேதிகளை ஸ்ருதிஹாசனால் மொத்தமாக கொடுக்க முடியவில்லை. எனவே பாலிவுட் படங்களுக்கு கொடுத்த தேதிகள் போக மீதி இருக்கும் தேதிகளை அட்ஜஸ்ட் செய்து விஜய்க்கு தருவதாகவும், அந்த நாட்களில் படப்பிடிப்பு வைத்துக்கொள்ளவும் என சிம்புதேவனிடம் நிபந்தனை விதித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.

ஸ்ருதிஹாசனின் இந்த நிபந்தனைகளால் விஜய் அதிருப்தி அடைந்துள்ளார். எனவே ஸ்ருதிஹாசன் படத்தில் இருந்து நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறியதாவது, “விஜய் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டபோது இயக்குனர் கேட்ட தேதிகளை பிரச்சனையின்றி கொடுத்துள்ளேன். இந்த செய்தி வெறும் வதந்திதான் என்றும் அதை யாரும் நம்பவேண்டாம் என்றும் கூறியுள்ளார். மேலும் விஜய் படத்தில் நான் நடிக்கவில்லை, என் படத்தில்தான் விஜய் நடிக்கிறார் என  ஸ்ருதிஹாசன் கூறியதாகவும் தெலுங்கு பத்திரிகை ஒன்றுக்கு ஸ்ருதிஹாசன் பேட்டியளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் ஸ்ருதிஹாசன் மீது கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலையும் ஸ்ருதிஹாசன் மறுத்துள்ளார்.

Leave a Reply