shadow

12004800_991975634186950_1378690265152769751_n

நேற்றையதினம் ( 13.09.15) அடியோங்கள் சொந்த ஊரான மெய்யூரில் அங்கு எழுந்தருளுயிருக்கும் ஸ்ரீ.சுந்தரராஜப் பெருமாள் பவித்திர உற்சவத்தினை ஸேவிக்கும் பொருட்டு மெய்யூர் சென்றிருந்தோம். மாலை திருமஞ்சனம் முடிந்த பிறகு அங்கிருந்து சிங்கப்பெருமாள் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ. பாடலாத்ரி நரசிம்மரை ஸேவிக்கச் சென்றோம். பின் ஸ்ரீ.முதலியாண்டான் ஸ்வாமி திருமாளிகைக்கு ஸ்வாமியை சேவிக்கச் சென்றோம்.

அப்பொழுது ஸ்வாமி திருமாளிகையில், ஸ்வாமி.ஸ்ரீ.மணவாள மாமுனிகளின் அத்யந்த சிஷயரான ஸ்ரீ.அப்பாச்சியாரண்ணா ஸ்வாமியின் திருநக்ஷத்திரத்தை ( ஆவணி ஹஸ்தம், வரும் 15.09.15 அன்று ) முன்னிட்டு எட்டாம் திருநாளான நேற்று, திருவாய்மொழி ஐந்தாம் பத்தும், ஆறாம் பத்தும் கோஷ்டி நடந்து கொண்டிருந்தது. ஸ்வாமியை ஸேவித்து விட்டு, அவரின் ஆசியுடன் , திருவல்லிக்கேணி திரும்ப எண்ணி, ஸ்வாமியிடம் விண்ணப்பித்துக் கொண்டபொழுது, ஸ்வாமி அடியோங்களை இருக்கச் சொல்லி, சாற்றுமுறையாகி, தீர்த்த, பிரசாத வினியோகம் முடிந்தபிறகு புறப்படச் சொன்னார்.

10533442_991975590853621_3257095281814652181_n

கோஷ்டி முடிந்த பிறகு, ஸ்வாமியுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பி , ஸ்வாமியிடன் அடியேனின் உள்ளக் கிடக்கையை தெரிவித்தேன். மிகவும் சௌஜல்யமான ஸ்வாமி, ” அதற்கென்ன, தாராளமாக புகைப்படம் எடுத்துக் கொள் ” என்று சொல்லி, அங்கிருந்த ஒரு புகைப்படம் எடுப்பவரை கூப்பிட்டு, புகைப்படம் எடுக்கச் சொன்னார்.

மிகவும் ஆனந்தத்துடன், ஸ்வாமியின் அருளாசியினைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து, இரவு 8.45 மணிக்கு மேல் திருவல்லிக்கேணி நோக்கி புறப்பட்டோம்.

Leave a Reply