6 மணி நேரத்தில் முடிந்த அதிசயமான டெஸ்ட் போட்டி

டெஸ்ட் போட்டி என்றாலே ஐந்து நாட்கள் நடைபெறும் போட்டி என்ற நிலையில் கடந்த 1932ஆம் ஆண்டு நடந்த ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெறும் 6 மணி நேரத்தில் முடிவுக்குவந்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவும் 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா மீண்டும் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா ஒரு இன்னிங்ஸ் 72 ரன்களில் வெற்றி பெற்றது. இந்த போட்டி 1932ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி நடந்ததை அடுத்து நேற்று இந்த போட்டியின் 86வது ஆண்டு நினைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *