shadow

இந்தியாவுக்கு எதிரிகள் வெளியில் இல்லை. ஆசம்கானுக்கு சிவசேனா கடும் கண்டனம்
azam khan
உத்திரபிரதேச அமைச்சரான ஆசம் கானின் சமீபகால நடவடிக்கைகளை பார்க்கும்போது இந்தியாவுக்கு எதிரிகள் வெளியில் இல்லை என்றும், இவரை போன்ற பாம்புகளையும், தேள்களையும் நாட்டிற்குள் வைத்திருந்தால் நாட்டிற்கே ஆபத்து என்றும் சிவசேனா தன்னுடைய பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் உ.பி. அமைச்சர் ஆசம்கான், இந்தியாவின் சிறுபான்மையினர் விவகாரத்தில் தலையிடுமாறு ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான்-கி-மூனுக்கு கடிதம் மூலம் கோரியிருந்தார். இதுகுறித்து சிவசேனா தனது கட்சி தன்னுடைய பத்திரிக்கையான சாம்னாவில் ஆசம்கானை கடுமையாக விமர்சித்துள்ளது. அதில், ”பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால் மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்திருக்காது என்று ஆசம்கான் கூறியுள்ளதன் மூலம் மும்பை குண்டு வெடிப்பை அவர் ஆதரிப்பதாக தெரிகிறது. இவரை போன்றவர்களே இந்தியாவின் எதிரிகள் என்று விமர்சித்துள்ளது.

மேலும் வெளிநாட்டில் இருந்து வந்த பாபர், ராமர் கோவிலை இடித்தது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காத ஆசம்கான், இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராகிமை விட உத்தரபிரதேச மாநில அமைச்சர் அசாம் கான் மிகவும் ஆபத்தானவர்” என்று கடுமையாக விமர்சித்து உள்ளது

சிவசேனா மற்றும் ஆசம்கான் ஒருவரை ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply