shadow

11

ஆழ்கடல் மீன் பிடிப்பு கப்பல்களிலும் வணிக கப்பல்களிலும் என்ஜினீயர் மற்றும் கேப்டன்களாக பணிபுரிய உதவித் தொகையுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய கடல்சார், மீன்வள தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (சிப்நெட்) இதற்கான பயிற்சியை அளிக்கிறது.

வெசல் நேவிகேட்டர், மரைன் பிட்டர் பயிற்சி, தலைமை வேலைவாய்ப்பு பயிற்சி இயக்குநரகத்தின் அங்கீகாரம் பெற்றதாகும். இந்தப் பயிற்சி இரண்டு ஆண்டு காலத்துக்கு அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பில் கணிதம், அறிவியல் பாடங்களில் 50 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான தேர்வு ஜூன் 21-ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. வெசல் நேவிகேட்டர், மரைன் பிட்டர் பயிற்சிக்காக தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ரூ.1500 உதவித் தொகை, தங்கும் விடுதி ஆகியவை வழங்கப்படும்.

இந்த பயிற்சிக்கு தகுதியுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை மே 16-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தமிழக மாணவர்களுக்கும் ஆழ்கடல் மீன்பிடிப்பு வணிக கப்பல்களில் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இப்பயிற்சி வழங்கப்படுகிறது.

தகுதி உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய கடல்சார், மீன்வள தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு தலைமை அலுவலர், மத்திய கடல்சார், மீன்வள தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (சிப்நெட்) எண்.59, எஸ்.என்.செட்டி தெரு, ராயபுரம், சென்னை-13 என்ற முகவரியிலும் அல்லது 044- 2595 2691, 2595 2692, 2595 2693 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும் www.cifnet.gov.in என்ற இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply