ஏழாவது ஐ.பி.எல் போட்டிக்காக வீரர்களின் ஏலம் பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது. இதில் முந்தைய போட்டிகளில் விளையாடிய முக்கிய வீரர்கள் அந்தந்த அணி உரிமையாளர்கள் விரும்பினால் ஏலம் விடாமலேயே தக்க வைத்துக்கொள்ளாலாம். அவ்வாறு தக்கவைக்கப் படாதவர்கள் மட்டும் ஏலம் விடபடுவார்கள். அதிக தொகைக்கு ஏலம் எடுத்த அணிக்கு அந்த வீரர்கள் விளையாடுவார்கள்.

இதுவரை டெல்லி அணியில் இருந்த வீரர் ஷேவாக்கை அந்த அணி தக்கவைத்துக்கொள்ளும் நிலையில் இல்லை என்று கூறிவிட்டதால் ஷேவாக் முதன்முறையாக ஏலத்திற்கு வருகிறார். கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடாத ஷேவாகை இந்த ஐ.பி.எல். போட்டியில் எந்த அணியாவது ஏலம் எடுக்குமா என்பது கேள்விக்குறியே?

ஐ.பி.எல். அணிகளில் எந்தெந்த வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள் என்ற பட்டியல் இறுதியாக நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இதில் உள்ள வீரர்கள் குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியிடப்படும். அந்த வீரர்கள் தவிர மற்றவர்கள் ஏலத்தில் விடப்படுவார்கள் என ஐ.பி.எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *