shadow

22vjsub_rajagopuram_368353g

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’

கிராமங்களில், மிக உயரமாக இருப்பது ராஜகோபுரம்தான். அது, நம் கண்ணில் படாமல் இருக்காது. ஆனால், இதெல்லாம் கோபுர தரிசனம் ஆகாது.

திடகாத்திரமான உடலும் இளமையும் கொண்டிருப்பவன், ‘கோபுரத்தை தரிசித்து விட்டேன்; கோடி புண்ணியம் உண்டு’ என்று கருதினால், அது தவறு. அவனுக்கு எந்தவித பலனும் கிடைக்காது. கோபுரத்தை தரிசித்தாலே போதும் என்று கோயிலுக்குச் செல்வதைத் தவிர்க்கும் மனம் இறையருளை இழந்து விடும்

உடல் நலக் குறைவு, முதுமை ஆகிய காரணங்களால் நடமாட இயலாதவர்கள், ‘கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியவில்லையே’ என்ற தங்களது ஆதங்கத்தைப் போக்கிக் கொள்ள, கோபுர தரிசனம் செய்யலாம். அப்போதும் அவர்களின் மனம், கோயிலுக் குள் குடிகொண்டிருக்கும் இறைவனையே நினைக்க வேண்டும்.

‘கங்கையில் நீராடினால் புண்ணியம்’ என்பார்கள். அதற் காக கங்கை நீரில் வாழும் உயிரினங்கள் அத்தனையும் மோட்சத்தை அடையும் என்று சொல்ல முடியுமா?! ‘நான் காசிக்கு போகப் போகிறேன். அங்கே தங்கப் போகிறேன் என்றாலே போதும். காசிக்குச் சென்று தங்கிய புண்ணியம் உண்டு!’ என்று பொருள் தரும் செய்யுள் உண்டு.

அதற்காக காசிக்குப் போகத் தேவை இல்லை எனக் கருத முடியுமா? ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பதும் இப்படித்தான். ஆன்மிகத்திலும் ஆண்டவன் வழி பாட்டிலும் பிடிப்பு ஏற்படுவதற்காக இப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்கள் அவ்வளவே!

Leave a Reply