15கடந்த 1989ஆம் ஆண்டு கமல், கவுதமி, ரூபிணி நடித்த சூப்பர் ஹிட் வெற்றிப்படம் ‘அபூர்வ சகோதரர்கள்’. இந்த படத்தில் கமல் குள்ளமனிதராக தனது உடலை வருத்தி நடித்திருந்தார். கிராபிக் டெக்னாலஜி இல்லாத அந்த காலத்தில் கமல் இந்த கேரக்டரில் எப்படி நடித்தார் என்ற ரகசியம் இன்று வரை வெளிவரவில்லை.

இந்நிலையில் இந்த படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்கிறார் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான். ஆனால் கமல் போல காலை மடக்கி நடிக்கபோவதில்லையாம். கிராபிக் டெக்னாலஜியில் காலை குட்டையாக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான கிராபிக்ஸ் பணிகள் இப்போதே தொடங்கிவிட்டதாகவும் இந்த படம் வரும் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி ரிலீஸ் என்பதையும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தில் கவுதமி, ரூபிணி வேடத்தில் இரண்டு முன்னணி பாலிவுட் நடிகைகள் நடிக்கவுள்ளதாக இந்த படத்தை இயக்கவுள்ள ஆனந்த் எல்.ராய் தெரிவித்துள்ளார். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *