ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தற்போது கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனியிலும் குளிரை பொருட்படுத்தாமல் மாஸ்கோ மக்கள் பனிமனித வடிவங்களை செய்து மகிழ்ந்து வருகின்றனர்.

மாஸ்கோவில் தற்போது -15 டிகிரியாக கடுங்குளிர் நிலவுகிறது.  இந்த குளிரில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பனிமனித வடிவங்களை செய்து வருகின்றனர். விரைவில் மாஸ்கோவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் உருவங்களை பனிமனித வடிவில் செய்து வருகின்றனர்.

கடந்த 25ஆம் தேதி மாஸ்கோவில் பனிமனித உருவங்களை செய்யும் போட்டி ஒன்றை தனியார் நிறுவனம் நடத்தியது. இதில் ஏராளமான சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு பிடித்த உருவங்களை பனியில் செய்தார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த பனிமனித வடிவங்களை பார்க்க உலகெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

Leave a Reply