shadow

I and LIngaaஅஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ ஏற்படுத்திய பரபரப்பையும் ரஜினியின் லிங்கா ஏற்படுத்திய பரபரப்பையும் பார்த்து கோலிவுட்டே அதிர்ந்துள்ளது. படத்தை முடித்துவிட்டு ரிலீஸ் செய்ய காத்திருக்கும் சிறு பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டைட்டில் ரிலீஸ் தினத்தன்றும், ரஜினியின் லிங்கா டீஸர் தினத்தன்றும் டுவிட்டர் இணையதளமே ஹெங் ஆகும் அளவிற்கு சென்றது. எங்கு பார்த்தாலும் அஜீத், ரஜினி டுவிட்டுக்கள்தான்.

பலகோடி ரூபாய் செலவு செய்து பிரமாண்டமாக ‘ஐ’ படத்தின் பாடல் வெளியீட்டை நடத்தினார் ஷங்கர். தமிழ்த்திரையுலகம் இதுவரை பார்த்திராத பிரமாண்டமான அந்த நிகழ்ச்சியில் அர்னால்டு கலந்து கொண்டு கோலிவுட்டை குலுங்க வைத்தார். ஆனால் இவை எதுவுமே இன்றி ஒரே ஒரு படத்தலைப்பு அறிவிப்பையும், டீஸர் வெளியீட்டையும் வைத்து ஒரு பைசா செலவு இன்றி நாட்டையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்துவிட்டனர் ரஜினியும் அஜீத்தும்.

என்னை அறிந்தால், லிங்காவுக்கு கிடைத்த மாஸ் வரவேற்பை பார்த்து அதிர்ச்சியடைந்த ஷங்கர், தன்னுடைய படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றது. ரஜினியின் லிங்கா டிசம்பரிலும், அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ பொங்கலிலும் வெளிவர இருப்பதால், ‘ஐ’ படத்தின் ரிலீஸை பிப்ரவரிக்கு தள்ளி வைக்கலாமா என்பது குறித்து ஷங்கர் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் கோடிக்கணக்கில் செலவு செய்து அழைத்து வரப்பட்ட அர்னால்டு பரபரப்பை லிங்காவின் அரைநிமிட டீசர் வீழ்த்திவிட்டதாக கோலிவுட்டில் பெரும் பரபரப்புடன் பேச்சு அடிபடுகிறது.

Leave a Reply