shadow

I and yennai arindhaalவரும் பொங்கல் திருநாளில் அஜீத் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதால் பொங்கலுக்கு ரிலீஸாக முடிவு செய்திருந்த பல திரைப்படங்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘ஐ’ படத்தின் இயக்குனர் ஷங்கர் கூட அஜீத்துடன் மோத விரும்பாமல் படத்தின் ரிலீஸை தள்ளி வைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் கூறுகின்றன.

ஷங்கரின் ஆலோசனைப்படி ஐ படத்தின் ரிலீஸை ஒருவாரம் தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய புதிய திட்டத்தின்படி ‘என்னை அறிந்தால்’ ஜனவரி 8ஆம் தேதி, “ஐ”,  ஜனவரி 15ஆம் தேதியும் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு இரண்டு படத்தயாரிப்பாளர்களும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

அஜீத் படத்தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்புக்கே டுவிட்டர் அதிரும்படி அஜீத் ரசிகர்கள் ஸ்டேட்டஸ் போட்டு கலக்கினார்கள். இந்நிலையில் அஜீத் ரசிகர்களை பகைத்துக்கொள்ள ஷங்கர் விரும்பாமல்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ‘ஐ’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு விஜய்யை அழைக்காததால் கோபமாக இருந்த விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தவே தான் வெளியிடும் கப்பல் படத்தின் ஆடியோ ரிலீஸுக்கு விஜய்யை அழைத்து ஷங்கர் கெளரவப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply