shadow

சிங்கணாப்பூர் சனிபகவான் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும். மும்பை ஐகோர்ட் உத்தரவு
singanapur
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்த வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில்  சிங்கணாப்பூர் சனிபகவான் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று மும்பை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் சிங்கணாப்பூர். இங்கு பழமை வாய்ந்த சனிபகவான் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலுக்குள் பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து, மும்பை ஐகோர்ட்டில் மூத்த வழக்கறிஞர் நீலிமா வர்டாக், சமூக ஆர்வலர் வித்யா பால் ஆகியோர் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தனர்.

வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவில், ”கோயில்களுக்குள் வழிபாடு நடத்துவதற்கு பெண்களுக்கு விதிக்கப்படும் தடையானது, குடிமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும் இது சட்டவிரோதமான செயல் என்றும் எனவே 1956-ம் ஆண்டு மகாராஷ்டிர இந்து மத வழிபாட்டுத்தல சட்டத்தை அமல்படுத்த அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்றும் கோரிக்கை எழுப்பியிருந்தனர்.

இந்த மனு மும்பை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஹெச்.வகேலா, நீதிபதி எம்.எஸ்.சோனாக் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணை செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள், ”கோயில்களுக்குள் வழிபாடு நடத்துவதற்காக உள்ளே செல்வது, பெண்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமையாகும். இந்த அடிப்படை உரிமையை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

இதனை உறுதிப்படுத்தும் 1956-ம் ஆண்டு மகாராஷ்டிர இந்து மத வழிபாட்டு இட சட்டப் பிரிவுகளை அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மகாராஷ்டிர அரசு உடனே எடுக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர். இந்த தீர்ப்பை அடுத்து நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அந்தச் சட்டத்தை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த அதிரடி உத்தரவை மகாராஷ்டிர மாநில பெண்கள் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து பகுதிகளில் உள்ள பெண்கள் நல ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

Chennai Today News: Shani Shingnapur row: Women prevented from entering core shrine area, asked to show court order

Leave a Reply