shadow

டுவிட்டரில் இணைந்தார் ஷாமிலி
shamlee
அஜீத் மனைவி ஷாலினியின் தங்கை ஷாமிலி குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர். கடந்த 2009ஆம் ஆண்டு நாயகியாக ஒரு தெலுங்கு படத்தில் சித்தார்த்துடன் நடித்த ஷாமிலி, அதன் பின்னர் வெளிநாட்டுக்கு படிக்க சென்றுவிட்டார்.

தற்போது மீண்டும் நாடு திரும்பியுள்ள ஷாமிலி, இரண்டு தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தனுஷ் நடிக்கும் திரைப்படம் ஒன்றிலும், விக்ரம் பிரபு நடிக்கும் ‘வீர சிவாஜி’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள ஷாமிலி சமீபத்தில் டுவிட்டரில் இணைந்துள்ளார்.

டுவிட்டரில் தற்போது 1,646 ஃபாலோயர்கள் உள்ளனர். ஷாமிலி தனது டுவிட்டர் கணக்கில் தனது திரைப்படங்கள் குறித்தும் தனது ஷெட்யூல் குறித்தும் தனது ரசிகர்களுக்கு பதிவு செய்து வருகிறார். அஜீத் குறித்தும், அவருக்கு தனது சகோதரி ஷாலினி குறித்தும் அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply