shadow

shahrukh-khan-wallpaperபாலிவுட் நடிகர் ஷாருக்கான் உலகிலேயே இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற புகழை பெற்றுள்ளார். அவருக்கு 600 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சொத்துக்கள் உள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.3600 கோடி ஆகும். முதலிடத்தில் அமெரிக்க காமெடி நடிகர் ஜெரி செயின்பீல்ட் உள்ளார். அவருக்கு $820 சொத்து மதிப்பு உள்ளது. அதாவது ரூ.4800 கோடி ஆகும்.

மூன்றாவது இடத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம்குரூஸ் $480 மில்லியனும், நான்காவது இடத்தில் டைலர் பெர்ரி என்ற நடிகர் $450 மில்லியனும், ஐந்தாவது இடத்தில் ஜான்னி டிப் என்ற நடிகர் $450 மில்லியன் சொத்துக்களும் வைத்துள்ளனர்.

ஷாருக்கான், நடிகராக மட்டுமின்றி ஐ.பி.எல் கிரிக்கெட் அணியின் உரிமையாளராகவும், பல தொழில்களும் செய்து வருகிறார். மேலும் விளம்பரப்படங்களில் நடிப்பதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் செய்கிறார்.

ஷாருக்கான் கடந்த 20 வருடங்களாக பாலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் இதுவரை சுமார் 50 படங்கள் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் அனைத்து பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை தகர்த்து மாபெரும் வசூலை கொடுத்தது.

Leave a Reply