shadow

இந்தியாவிடம் கெஞ்ச வேண்டாம். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு அப்ரிடி அறிவுரை
afridi
இந்திய கிரிக்கெட் அணியுடன் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கெஞ்சுவதற்கு பதில் வேறு நாட்டு அணிகளை பாகிஸ்தானுக்கு அழைத்து வந்து போட்டிகளை நடத்தலாம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் சாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெறவில்லை. இந்திய எல்லையில் பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதலை நிறுத்தினால் மட்டும்தான் பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் விளையாடுவது பற்றி ஆலோசிக்க முடியும் என இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதியுடன் கூறிவிட்டதால் இரு நாட்டு அணிகளுக்கு இடையே எந்த போட்டியும் சமீபத்தில் நடைபெறவில்லை.

2015ஆம் ஆண்டில் இருந்து 2023 ஆம் ஆண்டு வரை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடும் 6 தொடர்கள் குறித்து இருநாட்டு கிரிக்கெட் வாரியங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. ஆனால் இந்த போட்டிகளுக்கு இந்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

இது குறித்து  லாகூரில் பாகிஸ்தான் அணி வீரர் சாகித் அப்ரிடி கூறுகையில், “ தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்காக நாம் ஏன் போராட வேண்டும்? அவர்களுக்கு நம்முடன்  விளையாட விருப்பமில்லை என்றால் நாம் ஏன் அவர்களுடன் விளையாட ஆர்வம் காட்ட வேண்டும். இந்தியா நம்முடன் விளையாடவில்லை என்றால்  எந்த பாதகமும் இல்லை. பிற வெளிநாட்டு அணிகளை பாகிஸ்தானுக்கு அழைத்து விளையாட வைப்போம் ” என்று கூறியுள்ளார்.

Leave a Reply