ஷாஹி முர்க் பக்கோரா

 

maxresdefault

 

இது இப்போதெல்லாம் பல இடங்களில் கிடைக்கும் மிக பிரபலமான ஒரு சிற்றுண்டியாக இந்த சிக்கன் பக்கோரா உள்ளது. தயாரிப்பதற்கு சிறிது அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும், இதன் சுவைக்காக இதை பொறுத்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:

1. கோழி மார்பகங்கள்
2. பால்
3. குங்குமப்பூ
4. பூண்டு
5. சிவப்பு மிளகாய்த்தூள்
6. சீரகத் தூள்
7. எலுமிச்சை சாறு
8. உப்பு
9. பருப்பு பொடி
10. சீரகம்
11. அரிசி மாவு
12. கரம் மசாலா தூள்
13. சோடா மாவு
14. மஞ்சள் தூள்
15. எண்ணெய்

செய்முறை:

  • கோழியை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
  •  சூடான பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும்.
  •  பூண்டை நசுக்கி, எலுமிச்சை சாற்றில் கலந்து கொள்ளவும். ஊற வைத்த‌ குங்குமப்பூ, மஞ்சள் தூள், மிளகாய்  தூள், உப்பு போட்டு இதனுடன் கோழி துண்டுகளையும் கலந்து சில மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
  •  இந்த கோழியுடன், பூண்டு, மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும்.
  •  ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசி மாவு, அனைத்து உலர் மசாலா மற்றும் சோடா மாவை சேர்த்து கலந்துக்  கொள்ளவும்.
  •  இதனுடன் தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு செய்து கொள்ள வேண்டும்.
  •  இப்போது இதில் ஊற வைத்த கோழி துண்டுகளை தோய்த்து எண்ணெயில் போட்டு எடுக்கவும்.
  •  கோழி பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *