shadow

‘சர்வர் சுந்தரம்’ படத்திற்கு கிடைத்த முதல் வெற்றி

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு நேற்று சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘U’ சான்றிதழ் அளித்ததோடு, படக்குழுவினர்களையும் பாராட்டியுள்ளனர்.

சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்ட போதிலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை இல்லை. வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி அஜித்தின் ‘விவேகம்’ படமும், அதனையடுத்து ஒரிசில நாட்களில் தனுஷின் ‘விஐபி 2’ படமும் வெளியாகவுள்ளதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பரில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தானம், வைபவி, பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு பிகே வர்மா ஒளிப்பதிவும், தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Leave a Reply