shadow

நத்தம் விஸ்வநாதன் கைதா? அமலாக்கத்துறை அதிகாரிகளின் தொடர் விசாரணையால் பரபரப்பு

viswanatham_1அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனின் பினாமி என்று கூறப்படும் அன்புநாதனின் வீட்டில் இருந்து ரூ.5 கோடி பணம் கைப்பற்றப்பட்ட நிலையில் இந்த பணம் நத்தம் விஸ்வநாதனுக்கு சொந்தமானது என்ற தகவல்கள் காரணமாகவும், நத்தம் விஸ்வநாதன் மீது எழுந்த வரி ஏய்ப்பு புகார் காரணமாகவும் சமீபத்தில் நத்தம் விஸ்வநாதனின் வீடு, கல்லூரிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்றது. சோதனை நடைபெற்றுக்கொண்டிருந்த போதே, அ.தி.மு.க.வில் நத்தம் விசுவநாதன் வகித்து வந்த பதவிகள் பறிக்கப்பட்டன.

இந்நிலையில் வருமான வரித்துறை ரெய்டு முடிந்த பின்னர் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நத்தம் விசுவநாதனுக்கு அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அதன்படி நத்தம் விசுவநாதன் விசாரணைக்கு ஆஜரானார். அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். விசாரணையின் முடிவில் நத்தம் விசுவநாதன் கைது செய்யப்பட்டதாக நேற்று மாலை தகவல் வெளியானது. தொலைக்காட்சிகளிலும் நத்தம் விசுவநாதன் கைது என்று செய்திகள் ஒளிபரப்பாயின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில், ‘தான் கைது செய்யப்படவில்லை என்றும், அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு சரியான முறையில் விளக்கம் அளித்துள்ளேன் என்றும் நத்தம் விசுவநாதன் விளக்கம் அளித்தார்.

Leave a Reply