shadow

murali dioraகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சருமான முரளி தியோரா உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை 3.25 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77.  மரணம் அடைந்த முரளி தியோராவுக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிர மாநில தலைவராக 22 ஆண்டுகள் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியிலும் மத்திய அமைச்சரவையிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த முரளி தியோரா, 1975 ஆம் ஆண்டு முதன்முறையாக மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டார். பொருளியல் பட்டப்படிப்பு படித்த முரளி தியோரா 1977 முதல் 1978 வரை மும்பை மாநகராட்சி மேயராக பணியாற்றினார். பின்னர் மும்பை தெற்கு தொகுதியில் இருந்து 4 முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். முரளி தியோராவின் மகன் மிலிந்த் அவர்களும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முரளி தியோராவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மும்பை காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை மும்பை சந்தன் வாடி மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply