shadow

பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்து மரணம்.

kumarimuthuபிரபல நகைச்சுவை நடிகர் குமரி முத்து உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை மரணம் அடைந்தார்,. அவருக்கு வயது 77

கடந்த 1978ஆம் ஆண்டு முதல் சுமார் 500 படங்களுக்கும் மேல் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ள குமரிமுத்து கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரிமுத்து இன்று அதிகாலை மரணம் அடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளது.

கடந்த 1978ஆம் ஆண்டு ‘இவள் ஒரு சீதை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான குமரிமுத்து முள்ளும் மலரும், ஊமை விழிகள், இது நம்ம ஆளு, நண்டு, இதயம், சகாதேவன் மகாதேவன், வில்லு உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குமரிமுத்து என்றாலே அவரது தனி முத்திரை சிரிப்புதான் அனைவருக்கும் ஞாபகம் வரும். மேடை நாடகங்களில் நடித்து பின்னர் சினிமாவுக்கு வந்த குமரிமுத்து எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜனி, கமல், அஜித், விஜய் என மூன்று தலைமுறை நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் குணசித்திர பாத்திரங்களிலும் குமரிமுத்து நடித்துள்ளார்.

திமுக பேச்சாளராகவும் இருந்த குமரிமுத்து தேர்தல் நேரங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

Leave a Reply