தொழிலதிபர்களுக்கு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்

தமிழக கல்வி அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றதில் இருந்தே தமிழக பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. ரஜினி உள்பட அமைச்சரின் பணியை வேற்று கட்சியினர்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ‘தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு முன்னாள் மாணவர்கள் உதவ வேண்டும் என்றும், தொழிலதிபர்களும் தங்கள் நிறுவனங்களில் சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் உதவலாம் என்றும், மக்களும் அரசு பள்ளிக்கு சேவை செய்திட வாருங்கள் என இருகரம் கூப்பி அழைப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசு பள்ளிகள் தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் கொடுக்கும் நிதியால் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கொண்டு வரமுடியும் என்பதே பலரது கருத்தாக உள்ளது

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *