shadow

selfie stick

சுயபடம் எடுத்துத் தள்ளும் வழக்கம் கொண்ட செஃல்பி பிரியர்கள் நிச்சயமாகச் சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம். ஏனெனில் செல்ஃபி சார்ந்த தொழில்நுட்பம் ஒன்று இந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. முகத்துக்கு முன்பு போனை வைத்துக்கொண்டு சுயபடம் எடுக்கும்போது இன்னும் கொஞ்சம் கூடுதல் சுதந்திரத்தை அளிக்க உதவும் செல்ஃபி ஸ்டிக்தான் அந்தக் கண்டுபிடிப்பு.

கைகளை நீட்டிப்பிடிப்பதைவிடக் கூடுதலான தொலைவில் ஸ்மார்ட் போனை வைத்துக்கொண்டு விரும்பிய கோணத்தில் சுயபடம் எடுத்துக்கொள்வதை செல்ஃபி ஸ்டிக் சாத்தியமாக்குகிறது. பல நிறுவனங்கள் இதைத் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு செல்ஃபி அதிகம் பேசப்பட்ட சொல்லாக இருந்தது. இந்த ஆண்டு, அது கலாச்சார நிகழ்வாக மாறியிருப்பதாக இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ள புகழ்பெற்ற டைம் பத்திரிகை தெரிவித்துள்ளது. மற்றொரு அறிக்கை, அமெரிக்கர்களில் 25 சதவீதம் பேர் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் பழக்கம் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மட்டுமல்ல, ஸ்மார்ட் போன் பிரபலமாக இருக்கும் எல்லா நாடுகளுக்கும் இது பொருந்தும் என்று கருதப்படுகிறது.

ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள் பட்டியலில் ஸ்மார்ட் போனில் அந்தரங்கப் பாதுகாப்பை உறுதி செய்யும் பிளாக்போனும் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply