shadow

திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய கட்டிடம் என்று இடிந்து விழுந்த சம்பவத்தில் தமிழக அரசு அலட்சியமாக செயல்படுவது கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

திருவொற்றியூர் குடிசை மாற்றுவாரிய அடுக்ககம் திடீரென முழுவதுமாக இடிந்துவிழுந்து விபத்துக்குள்ளானதை அறிந்து பேரதிர்ச்சியடைந்தேன். தொடர்ச்சியாக நிகழும் அடுத்தடுத்த கட்டிட விபத்துகள் குறித்து எவ்வித அக்கறையுமின்றி, தமிழக அரசு அலட்சியமாக செயல்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது.

இக்கட்டிடங்கள் கட்டப்பட்டு 25 ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில் அடியோடு இடிந்து விழுவது அவற்றின் தரமற்ற நிலையையே காட்டுகிறது. எனவே, இனி இதுபோன்று நடக்காதவாறு அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டிடங்களையும் தமிழ்நாடு அரசு ஆய்வு செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

தற்போது இடிந்து விழுந்துள்ள திருவொற்றியூர் அடுக்ககத்தில், தங்கியிருந்த மக்களுக்கு உடனடியாகப் பாதுகாப்பான மாற்று வாழ்விடம் வழங்குவதோடு, தங்கள் உடைமைகளை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு தலா ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்கவேண்டுமெனவும்
கேட்டு கொள்கிறேன்.