shadow

kathi and tenali

 

லட்சக்கணக்கான இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் நண்பர் தயாரிக்கும் கத்தி படத்திற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் பதுங்கி ஓடும் சீமான், வடிவேல் படத்திற்கு நாங்கள் தெரிவிக்கும் நியாயமான எதிர்ப்புக்கு கண்டனம் தெரிவிப்பது ஏன்? என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு தெலுங்கு பேரவை கேள்வி கேட்டுள்ளது.

கிருஷ்ணதேவராயரின் புகழுக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் காட்சிகள் இருந்தால் அதை நீக்க வேண்டும் என்று நியாயமான முறையில் கருத்து தெரிவித்த எங்களை சீமான் மிரட்டுவது வேடிக்கையாக உள்ளது. ராஜபக்சேவின் நண்பர் தயாரிக்கும் படம் என்றும் தெரிந்தும் அதுகுறித்து வாய்திறக்காமல் பதுங்கியிருக்கும் சீமான், எங்கள் மீது பாய்வது சரியான வேடிக்கை. அவருடைய மிரட்டலுக்கு நாங்கள் அஞ்சப்போவது இல்லை. எங்கள் உணர்வுகளை ஜனநாயக ரீதியில் தெரிவித்து இருக்கின்றோம். மற்றபடி வடிவேலுவோ அல்லது தமிழர்களோ எங்களுக்கு எதிரிகள் அல்ல என்பதை சீமான் புரிந்துகொள்ள வேண்டும்.

விஸ்வரூபம், துப்பாக்கி போன்ற படங்களுக்கு பிரச்சனை வந்தபோது இந்த சீமான் எங்கே போனார்? கமலும் விஜய்யும் தமிழர்கள் இல்லையா?  இப்பொழுது கத்தி படத்தின் பிரச்சனையிலும் தலையிடாமல் பதுங்கி  இருக்கும் சீமானுக்கு வடிவேலுவின் மீது ஏன் இந்த திடீர்ப்பாசம் என்று எங்களுக்கு புரியவில்லை. நாங்கள் எதையும் சந்திக்க தயார். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் ஜனநாயக வழியில் போராடுவோம். சீமானுக்கு இதன்மூலம் எங்களுடைய கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெலுங்கு பேரவை கூறியுள்ளது.

Leave a Reply