shadow

second marriageகோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நிகராக டோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் சிரஞ்சிவி. இவருடைய மகள் ஸ்ரீஜா சில வருடங்களுக்கு முன் தான் காதலித்த பரத்வாஜ் என்பவரை சூப்பர்ஸ்டார் குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார். வீடை விட்டு வெளியேறி கணவருடன் சிலகாலம் மட்டும் குடும்பம் நடத்திய ஸ்ரீஜா பின்னர் கணவருடனும், கணவரின் குடும்பத்தினர்களுடனும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று, குழந்தையுடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார்.

தற்போது மீண்டும் இந்தியா திரும்பியுள்ள ஸ்ரீஜாவை சூப்பர் ஸ்டார் சிரஞ்சிவி மீண்டும் மகளாக ஏற்றுக்கொண்டு தன்னுடைய வீட்டிலேயே சேர்த்துக்கொண்டார்.

இந்நிலையில் மீண்டும் மகளுக்கு மறுதிருமணம் செய்து வைக்க சிரஞ்சீவி முடிவு செய்துள்ளதாகவும், ஸ்ரீஜாவுக்கு பொருத்தமான மாப்பிள்ளையை பார்த்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. சூப்பர் ஸ்டார் மகளின் இரண்டாவது திருமணம் சிறப்பாக அமைய நமது வாழ்த்துக்கள்.

Leave a Reply