500 சிசிக்கு மேல் உள்ள வாகனங்களை ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணியவேண்டும் என்று மோட்டார் வாகன சட்டம் கூறியபோதும் இதுவரை பேருந்துகளை ஓட்டும் ஓட்டுனர்கள் சீட் பெல்ட் அணிவதில்லை. அவர்களும் கண்டிப்பாக சீட் பெல்ட் அணியவேண்டும் என சென்னை நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி ரவிச்சந்திரபாபு ஆகியோர் விசாரணை செய்தனர். அரசு பேருந்து ஓட்டுனர்களும் சீட் பெல்ட் அணியவேண்டுமா? என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி போக்குவரத்துத்துறைச் செயலாளர், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக இயக்குநர், அரசு விரைவு போக்குவரத்துக் கழக இயக்குநர் ஆகியோர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கை வழக்கறிஞர் பிரகாஷ்ராஜ் என்பவர் தொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply