shadow

shadow

 

பிரிட்டனுடன் 300 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்திருந்த ஸ்காட்லாந்து நாடு தனிநாடாக பிரியுமா என்பது இன்று தெரியவரும்.

இங்கிலாந்து, வேல்ச், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து கிரேட் பிரிட்டன் என்று அழைக்கப்படுகிறது. இதில் ஸ்காட்லாந்துக்கு தனியாக பாரளுமன்றம் இருந்தாலும், அந்த நாடு இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்தது.

இந்நிலையில் ஸ்காட்லாந்தில் கடந்த 2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஸ்காட்லாந்து தேசிய கட்சியின் தீவிர முயற்சியால் ஸ்காட்லாந்து தனிநாடாக மாறுவதற்கான கோரிக்கை வலுத்து வந்தது.

இந்நிலையில் பொதுவாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவின்படி நேற்று ஸ்காட்லாந்தில் பொது வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பின் முடிவு இன்று தெரிய வரும்.கடைசியாக கிடைத்த தகவலின்படி வாக்கெடுப்பு தொடங்கிவிட்டதாகவும், இந்திய நேரப்படி காலை 10 மணியளவில் முழு அளவில் முடிவு தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்த வாக்கெடுப்பில் இங்கிலாந்து நாட்டு அரசகுடும்பம் நடுநிலை வகித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வந்துள்ள செய்தி:

ஸ்காட்லாந்து தனிநாடாக பிரிவது குறித்து பதிவான வாக்குகளின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளன. இதில் 55% வாக்குகள் ஸ்காட்லாந்து, கிரேட் பிரிட்டனிலிருந்து பிரிய எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்யப்பட்டுள்ளன.

தனி நாடாக எதிர்ப்பு:

32 கவுன்சில்களில், 30 கவுன்சில்களில் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1,877,252 மக்கள் ஸ்காட்லாந்தில் இருந்து பிரிய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவாக 1,512,688 மக்கள் வாக்களித்துள்ளனர்.

பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற மொத்தம் 1,852,828 வாக்குகளே தேவைப்பட்டன. 55% வாக்குகள் ஸ்காட்லாந்து, கிரேட் பிரிட்டனிலிருந்து பிரிய எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வாக்கெடுப்பின் மூலம் இனி பிரிட்டனிலெயே ஸ்காட்லாந்து தொடரும் என்பது முடிவாகியுள்ளது.