shadow

CRICKET-WC-2015-SCO-SRI

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியும் ஸ்காட்லாந்து அணியு மோதி வருகின்றன.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 363 ரன்கள் குவித்தது. விக்கெட் கீப்பர் சங்கரகரா 124 ரன்களும், தில்ஷன் 104 ரன்களும், மாத்யூஸ் 51 ரன்களும் எடுத்துள்ளனர். இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சங்கரகரா அடித்துள்ள நான்காவது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற 364 ரன்கள் தேவை என்ற நிலையில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 43.1 ஓவர்களில் 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 148 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ஸ்காட்லாந்து அணி தோல்வி அடைந்தாலும் சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்துள்ளது. ஸ்காட்லாந்து அணி தனக்கு எதிராக விளையாடிய ஒரு அணியின் 9 விக்கெட்டுக்களையும் கேட்ச் மூலம் அவுட் ஆக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply