shadow

2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் உருவாகி 2021 ஆம் ஆண்டு டெல்டா வைரஸ் என்றும் 2022ஆம் ஆண்டு பூமி ஒமிக்ரான் வைரஸ் என்றும் உருமாறி வந்திருக்கும் நிலையில் தற்போது ஒமிக்ரானை அடுத்து வரும் வைரஸ் மிகவும் கடுமையானதாக இருக்கும் என இங்கிலாந்து நாட்டின் விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒமிக்ரானை தொடர்ந்து அடுத்து ஒரு கொரோனா வைரஸ் வரும் என்றும் அந்த வைரஸ் இன்னும் மிக கடுமையாக இருக்கும் என்றும் எனவே தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது ஒன்றுதான் நல்லது என்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

கொரோனா பற்றி சமீபத்தில் ஆய்வு செய்த இந்திய வம்சாவழி இங்கிலாந்து விஞ்ஞானி அரவிந்த் குப்தா அவர்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.