shadow

5

கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை, கடலுார், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகை ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று(டிச.,7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலை சேர்ந்த பள்ளி, கல்லுாரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி தொடங்கி கடந்த 20 நாட்களுக்கு மேலாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான நாட்கள் பல்வேறு கடலோர மாவட்டகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் வடகடலோர மாவட்டங்களில், அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, சென்னையில் மட்டுமில்லாது, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், வேலூர், திருவண்ணமாலை, புதுக்கோட்டை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இன்று காலை முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.  

இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் இதற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply