நாளையும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!

students

தமிழகத்தில் கனமழை காரணமாக நாளை மதுரை, இராமநாதபுரம், திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

அதேபோல் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி தென்காசி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் 4 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதுவரை 12 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியானதை அடுத்து எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளிவரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்