shadow

jayalalithaஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் தேதி முடிவடைவதை அடுத்து ஜாமீனை நீடிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்டோர்களின் ஜாமீனை மே 12ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் மே 12 -ந் தேதி வரை ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனினும் வழக்கு முடியும் வரை ஜாமீன் வழங்கவேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பெங்களூரு தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் இரு தரப்பினரின் வாதம் முடிவடைந்த நிலையில், நீதிபதி குமாரசாமி தற்போது தீர்ப்பை எழுதி வருகிறார். இவ்வழக்கில் ஏப்ரல் 30-ந் தேதிக்குள் தீர்ப்பு வழங்கவேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தீர்ப்பு வழங்க மேலும் 15 நாட்கள் கால அவகாசம் வழங்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதி குமாரசாமி கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply