shadow

nithiஆண்மை பரிசோதனைக்கு தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் நித்தியானந்தா தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் நித்யானந்தா ஆண்மை பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் நித்தியானந்தா ஆசிரமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம்  உள்ள பிடதி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் ஆர்த்தி ராவ் என்பவர் பெண் சீடராக இருந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் ஆசிரமத்தில் இருந்து திடீரென வெளியேறி பிடதி காவல்நிலையத்தில் நித்யானந்தாவுக்கு எதிராக பலாத்கார துன்புறுத்தல் புகார் ஒன்றை கொடுத்தார். இந்த வழக்கில், நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த பெங்களூர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நித்யானந்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நித்தியானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் ரஞ்ஜன் பிரகாஷ் தேசாய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்து, பின்னர் இதுகுறித்த வாதங்கள் நடந்தது.

இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், இன்று அந்த மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்பளித்தனர். அதில், ஆண்மை பரிசோதனைக்கு தடை விதிக்க கோரிய நித்யானந்தாவின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், பரிசோதனைக்கு அவர் ஒத்துழைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply