shadow

சசிகலாவுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

சசிகலாவை முதல்வர் பதவியை ஏற்க அனுமதிக்கக்கூடாது என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் நிர்வாகி செந்தில் குமார் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘’ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், விரைவில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதாகவும், ஒருவேளை தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக இருக்கும்பட்சத்தில், தற்போது முதல்வர் பதவியேற்கும் அவர் உடனே பதவி விலக நேரிடும் என்றும் இதனால், உச்சநீதிமன்றம் தலையிட்டு, தற்போதைக்கு சசிகலாவின் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும்,’’ என்றும் கூறப்பட்டிருந்தது.

ஆனால் இந்த மனுவை சற்றுமுன் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினர் கூறியுள்ள காரணங்கள் ஏற்கும்படி இல்லை என்றும் இதனால் இந்த மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்றும் கூறி நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

Leave a Reply