3 குழந்தைக்கு தாயாக நடிக்க எந்த நடிகையும் சம்மதிக்கவில்லை: சவரக்கத்தி இயக்குனர்

பிரபல இயக்குனர் மிஷ்கின் நடிப்பில் அவரது சகோதரர் ஜி.ஆர்.ஆதித்யா இயக்கியுள்ள ‘சவரக்கத்தி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மிஷ்கின், ராம், பூர்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் பேசியதாவது: முதலில் நான் பார்த்திபன் அவர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். மற்றும் பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவும் பணி புரிந்துள்ளேன். ஆனால் பார்த்திபன் அவர்களிடம் சிறிய காலம் மட்டுமே ஒரு 6 மாதங்கள் மட்டுமே பணி செய்தேன். நான் இயக்குநராக வேண்டும் என்று தான் சினிமாவிற்கு வந்தேன்.

சவரக்கத்தி கதை “பார்பர்” கதாபாத்திரத்தை மைய படுத்தி எடுக்கப்பட்டது. “பார்பர்” கதாபத்திரத்தை வைத்து என்ன பண்ணலாம் என்று பேசி பேசி ஓரு சிறிய கதை களம் கிடைத்தது. இப்படத்தில் ஒருமுக்கிய நிகழ்வு ஓன்று நிகழும். அந்த நிகழ்வுக்கு பின்பு தான் படத்தின் கதை நகர தொடங்கும். இப்படத்தின் கதை ஓரு நாளில் நடப்பது போன்ற கதை. ஓரு பார்பர் கதாபாத்திரம் அவன் வாழ்க்கையில் ஓரு நாள் காலையில் 9 மணிமுதல் மாலை 6 மணி வரை நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் கதை நகரும். அந்த கடை தான் அவனுக்கு உலகம். செவ்வாய்கிழமை மட்டுமே விடுமுறை என்பதால் சரக்கு அடித்து விட்டு நன்றாக தூங்குவான். இது தான் அவனது கதாபாத்திரம். அப்படி ஓரு சமயம் மிக பெரிய பிரச்சினையில் சிக்கிக்கொண்டு விடுகிறான். பின்பு எப்படி அவன் அந்த பிரச்சினையில் இருந்து மீண்டான் என்பது தான் மீதி கதை.

இப்படத்தில் முக்கியமான இரண்டு கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்று முதலிலே முடிவு பண்ணிட்டேன். படத்தின் கதாநாயகி கதாபாத்திரதிற்காக பல பேரிடம் கதை கூறினேன். படத்தின் கதையில் 3 குழந்தைகளுக்கு தாயாக நடிக்க யாரும் முன்வரவில்லை. கடைசியாக பூர்ணா மிகவும் சவாலான கதாபாத்திரம் என்று உணர்ந்து ஒப்புக்கொண்டார். மிக சிறப்பாக நடித்துள்ளார். படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரமும் சிறப்பாக நடித்துள்ளார்கள். இந்தப்படம் மொத்தமாக 45-48 நாட்களில் எடுக்கப்பட்டது. படத்தில் வரும் அணைத்து காட்சிகளும் சென்னையில் எடுக்கப்பட்டது. மக்களுக்கு இப்படத்தின் கதை ஓரு புதுவிதமான ஓரு அனுபவத்தை கண்டிப்பாக கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ராம், மிஷ்கினின் நடிப்பு படத்திற்கு மிக பெரிய பலம். படத்தின் இறுதிகட்ட காட்சிகளில் ராம் அவர்களுக்கு காலில் அடிப்பட்டுவிட்டது இருந்தாலும் மிக சிறப்பாக நடித்து முடித்துள்ளார்.

இவ்வாறு ஜி.ஆர்.ஆதித்யா கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *