ஹஜ் பயணிகளுக்கு மின்னணு அடையாள அட்டை. சவுதி அரேபியா அறிவிப்பு

hajjகடந்த ஆண்டு ஹஜ் பயணத்தின்போது ஏற்பட்ட நெரிசலால் நீண்ட சுவர் ஒன்று சரிந்து சுமார் 2000 பேர் வரை பரிதாபமாக பலியாகினர். பலியாகிய பலரின் விபரங்களை கண்டுபிடிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அவர்களுடைய அந்தரங்க விபரங்கள் மற்றும் மருத்துவத் தகவல்கள் அடங்கிய மின்னணு அடையாள அட்டை வழங்கப்படும் என சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.

இந்த மின்னணு அடையாள அட்டையில் பதிவு செய்யப்படும் தகவல்களைக் கொண்டு அரசு அதிகாரிகளால் அவர்களுக்கு மருத்துவ உதவி செய்யவும், அவர்களை அடையாளம் காணவும் முடியும் என்று சவுதி அரேபியா அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் கோடிக்கணக்கான முஸ்லீம்களுக்கு இந்த ஆண்டு கூடுதல் பாதுகாப்பு வழங்கவும், எந்தவொரு அசம்பாவித சம்பவமும் இந்த ஆண்டு நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *