shadow

satyamஐ.டி. நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த முறைகேடு காரணமாக அந்நிறுவனத்தின் தலைவர் ராமலிங்கராஜூ கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

சத்யம் நிறுவன முறைகேட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராமலிங்கராஜூ உட்பட 10 பேர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று ஐதராபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றதால் அளிக்கப்பட்டது. ராமலிங்கராஜு உள்பட 10 பேர்களும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிமன்றம், 10 பேருக்கான தண்டனை விவரத்தை நாளை அறிவிப்பதாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

சத்யம் நிறுவனத்தின் வரவு – செலவு கணக்கில் லாபத்தை அதிகரித்து காட்டி மோசடி செய்ததாகவும், இதன் மூலம் சத்யம் நிறுவன பங்குதாரர்களுக்கு ரூ.14.162 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் சிபிஐ சில மாதங்களுக்கு முன்னர் வழக்குப் பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் கைதான சத்யம் தலைவர் ராமலிங்கராஜூ உட்பட 10 பேரும், பின்னர் ஜாமீனில் ஏற்கனவே வெளியே வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply