இன்று கூடுய தமிழக சட்டசபையில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஒரு நாள் சபை ஒத்தி வைக்கப்படுவதா சபாநாயகர் கூறி ஒத்திவைத்தார்.
தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா காலை 9.54 மணிக்கு சபைக்கு வந்தார். அப்போது சபையில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் செலுத்தினார்கள்.
பின்னர் 10 மணிக்கு சபாநாயகர் தனபால் சபைக்கு வந்தார். இதையடுத்து கூட்டம் தொடங்கியது.
மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இரா.ராமலிங்கம், எட்மண்ட், ராஜா ராம் ரெட்டி, டென்னிஸ், தங்கவேலு, லதாபிரியகுமார், சவுரிராஜன், குருசாமி, பாலகிருஷ்ணன், சின்னச்சாமி, கணபதி, ஆகியோரின் இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் வாசித்தார். அதன் பிறகு சபை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தனார்கள். அதைத் தொடர்ந்து ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. பெருமாள் மறைவுக்கான இரங்கல் தீர்மானத்தை சபாநயாகர் வாசித்தார். அப்போது கூறியதாவது:-1988 முதல் 1991 வரையும், 1991 முதல் 1996 வரையும், 2011-ம் ஆண்டு ஆகிய 3 முறை ஏற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமாள் பழகுவதற்கு இனியவர். பண்பாளர். அன்பும் பாசமும் கொண்டவர். அவர் சார்ந்த கட்சிக்கு பொறுப்புடனும், கட்சி தலைமையுடன் விசுவாசத்துடனும் இருந்தவர். சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெற்றவர். இவர் 18.7.2013 அன்று மரணம் அடைந்ததை அறிந்து இந்த சபை அதிர்ச்சியும் ஆற்றொண்ணா துயரமும் அடைகிறது. அவரது குடும்பத்தினருக்கும், அவரை சேர்ந்த அனைவருக்கும் இந்த சபை இரங்கலும் ஆறுதலும் தெரிவிக்கிறது என்று அவர் கூறினார்.இதையடுத்து அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

Leave a Reply