nattyசதுரங்க வேட்டை படத்தின் மூலம் தன்னையும் ஒரு தரமான நடிகர் என நிரூபித்த பிரபல ஒளிப்பதிவாளர் நட்டி என்ற நடராஜன் அடுத்து நடிக்கவுள்ள படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை ராமு என்பவர் இயக்கவுள்ளார். இவர் இயக்குனர் பாண்டிராஜிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘எங்கிட்ட மோதாதே’ என்று இந்த படத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே தலைப்பில் விஜயகாந்த் நடித்த படம் ஒன்று பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் நடித்து வரும் ‘புலி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள நட்டி, அந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதால் தற்போது இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

சதுரங்கவேட்டை படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்தப்படத்தின் மூலம் அதைத்தக்கவைத்துக்கொள்வேன் என்கிற நம்பிக்கையில் இந்தப்படத்தில் மிகஆர்வமாக ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *