shadow

‘சதுரங்க வேட்டை 2’ படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு

தனி ஒருவன்’ படத்திற்கு மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி ஆன நடிகர் அரவிந்தசாமி தற்போது ‘சதுரங்க வேட்டை 2’ என்ற படத்தில் நடித்துவருகிறார். அரவிந்தசாமிக்கு ஜோடியாக முதல்முறையாக த்ரிஷா நடித்து வரும் இந்த படத்தை நிர்மல் குமார் என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் ஆகஸ்ட் 11ஆம் தேதி அதாவது நாளை இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளரும், பிரபல நகைச்சுவை நடிகருமான மனோபாலா அறிவித்துள்ளார்

பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா தயாரித்து வரும் இந்த படத்தில் அரவிந்தசாமி, த்ரிஷா, பூர்ணா, நாசர், ராதாரவி, ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வருகின்றனர். வெங்கடேஷ் ஒளிப்பதிவும், ராஜா சேதுபதி படத்தொகுப்பு பணிகளையும் செய்து வரும் இந்த படத்திற்கு அஸ்வமித்ரா என்பவர் இசையமைத்து வருகிறார்.

Leave a Reply