shadow

மது ஒழிப்பு போராட்டம் நடத்தியபோது திடீரென மரணம் அடைந்த காந்தியவாதி. பெரும் பரபரப்பு

shadow

கன்னியாகுமரி மதுவை ஒழிப்பதற்கக இன்று காலை போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிகுமார் திடீரென ரத்த வாந்தி எடுத்து மரணம் அடைந்தார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை என்ற கிராமத்தில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த டாஸ்மார்க் கடை கோயில், பள்ளி இருக்கும் பகுதியில் அமைந்துள்ளதால் அதனை அகற்றக்கோரி காந்தியவாதி சசிபெருமாள் அந்த ஊர் மக்களுடன் கடந்த ஆண்டு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றமும் உண்ணாமலைக்கடையில் உள்ள இந்த டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவு கடந்த ஒரு ஆண்டாக நிறைவேற்றப்படவில்லை.

இதனால் மீண்டும் களத்தில் குதித்த சசிபெருமாள் இன்று காலை 9.30 மணிக்கு அந்த பகுதியில் இருந்த 500 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறி தனது போராட்டத்தை தொடர்ந்தார். அவரைத் தொடர்ந்து அந்த பகுதியின் பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலனும் டவரில் ஏறினார்.

இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் ஜெயசீலன் டவரில் இருந்து கீழே இறங்கிவிட்டார். ஆனால், சசிபெருமாள் மட்டும் டவரில் இருந்துள்ளார். சுமார் ஐந்தரை மணி நேரம் டவரில் இந்த அவரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். பின்னர் ஒரு வழியாக சசிபெருமாளை காவல்துறையினர் மீட்டனர். அப்போது, சசிபெருமாள் ரத்த வாந்தி எடுத்ததாக தெரிகிறது. அவர் சட்டையில் ரத்தக்கறை படிந்திருந்தது. உடனடியாக சசிபெருமாள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோரித்த மருத்துவர்கள் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சசிகுமாரின் இந்த மரணம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மது ஒழிப்புக்காக தொடர்ந்து போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள் மறைவு குறித்து செய்தி அறிந்ததும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக கூறியுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சசிபெருமாள் மறைவுக்கு தமிழக அரசே பொறுப்பு என்று  குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply