அஜித்-விஜய்க்காக கதைகளை தயார் செய்து வைத்துள்ளேன். சசிகுமார்
ajith and vijay
இயக்குனர் பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘தாரை தப்பட்டை’ திரைப்படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் சசிகுமார் நடித்த அடுத்த படமான ‘வெற்றிவேல்’ படத்தின் படப்பிடிப்பும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இந்நிலையில் அடுத்ததாக இரண்டு கதைகளை சசிகுமார் தயார் செய்து வைத்துள்ளதாகவும், இந்த கதைகளை அஜித் மற்றும் விஜய் ஆகியோர்களை மனதில் வைத்து எழுதப்பட்டதாகவும் சசிகுமார் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

விரைவில் அஜித் மற்றும் விஜய்யை நேரில் சந்தித்து கதை சொல்ல போவதாகவும், அவர்களில் யாராவது ஒருவர் தன்னுடைய கதையில் நடிக்க ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அந்த படத்தின் பணிகளை தொடங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விஜய்யின் 60வது படத்தை பரதன் இயக்கவுள்ளார். அதேபோல் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க சிறுத்தை சிவா மற்றும் விஷ்ணுவர்தன் ஆகியோர் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் சசிகுமாருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Chennai Today News: Sasikumar ready to direct Ajith and Vijay

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *