shadow

அந்நிய செலவாணி வழக்கில் மீண்டும் சசிகலா. மதுரை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை அந்நிய செலவாணி வழக்கில் இருந்து விடுவித்தது ரத்து செய்யப்படுவதாகவும், அவர் அந்த வழக்கை சந்திக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட் கிளை நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவரவுள்ள நிலையில், அந்நிய செலவாணி வழக்கையும் சசிகலா சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 1996ஆம் ஆண்டு அந்நிய செலாவணி மோசடி தொடர்பான வழக்கில் சசிகலா கைது செய்யப்பட்டு சிறை சென்றார். பின்னர் ஜாமீனில் வெளி வந்த அவர் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார். .இந்த வழக்கை விசாரித்த அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்றம் மூன்று வழக்குகளில் இருந்தும் சசிகலாவை விடுதலை செய்தது.

ஆனால் இந்த விடுதலையை எதிர்த்து  அமலாக்கத்துறை சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பில்தான் மேற்கண்ட தீர்ப்பை மதுரை ஐகோர்ட் கிளை அதிரடியாக வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply