shadow

`சர்வம் தாள மயம்’ படத்தையும் முடித்துவிட்ட ஜிவி பிரகாஷ்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ‘குப்பத்து ராஜா’ படத்தின் படப்பிடிப்பை முடித்த ஜிவி பிரகாஷ் இன்றுடன் `சர்வம் தாள மயம்’ படத்தையும் முடித்துவிட்டார். இதனையடுத்து இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

17 வருடங்களுக்கு பிறகு ராஜூவ் மேனன் இயக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக `8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மைண்ட்ஸ்கிரீன் சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரவி யாதவ் ஒளிப்பதிவு பணிகளையும், அந்தோணி படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply