நயன்தாராவை விட பிசினஸ்தான் முக்கியம். சரவணா ஸ்டோர் சரவணன்

பிரபல தொழிலதிபரும் சரவணா ஸ்டோர் உரிமையாளருமான சரவணன் சமீபத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக ஒரு வதந்தி பரவியது. இந்த வதந்திக்கு நயன்தாரா தரப்பில் இருந்தும் சரவணன் தரப்பில் இருந்தும் மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த வதந்தி காட்டுத்தீ போன்று பரவியது.

இந்த நிலையில் சமீபத்தில் சரவணா ஸ்டோரின் நான்கு புதிய விளம்பரங்கள் படமாக்கபட்டது. இந்த விளம்பரங்களிலும் சரவணன் அவர்களே நடித்து வருகிறார். அவருக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியவர் சத்யா என்பவர். இவர் விஜய்யின் நெருங்கிய நண்பரும் விஜய் நடித்த ‘தெறி’ மற்றும் ‘பைரவா’ படங்களுக்கு காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யா தனது டுவிட்டரில் ல் ‘சரவணன் அவர்கள் நயன்தாராவுடன் திரைப்படம் நடிக்கவிருப்பதாக வெளிவந்த செய்தி முற்றிலும் வதந்தியே. சரவணன் தனது முழு கவனத்தையும் பிசினஸில் செலுத்தி வருகிறார். அவர் திரைப்படத்தில் நடிப்பது சாத்தியமில்லை’ என்று பதிவு செய்துள்ளார்.

The news thats spreading as he said,He wil act in a muvi wid is false.He is working round d clock concentrating on his business

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *