shadow

இலங்கை அரசியலில் திடீர் மாற்றம். கட்சியை கலைத்து சிறிசேனாவுடன் இணைந்தார் சரத்பொன்சேகா

Sarath Fonsekaஇலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடைபெற்ற இறுதிப்ப்போரில் விடுதலைப்புலிகளை அப்போதைய அதிபர் ராஜபக்ச்சேவின் உத்தரவின்படி வீழ்த்தியதில் முக்கிய பங்கு வகித்த  முன்னாள் ராணுவ தளதி சரத் பொன்சேகா, பின்னர் ராஜபக்சேவை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.   ஜனநாயக கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை தொடங்கிய அவர் சமீபத்தில் சிறிசேனாவுக்கு ஆதரவாக இருந்த நிலையில் தற்போது அவர்  கட்சியைஇ கலைத்துவிட்டு சிறிசேனாவின் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்,. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

இதைத் தொடர்ந்து சரத் பொன்சேகா, அடுத்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் ஆகி, அமைச்சராகவும் ஆவார் என இலங்கை ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால், அவருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் அது குறித்து விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் ஜெய்த் ராத் அல் உசேன் இந்த வாரம் தலைநகர் கொழும்பு வருகிறார்.

இந்த நிலையில் ஆளும் கூட்டணியில் இணைத்தது குறித்து சரத் பொன்சேகா, கொழும்பு நகரில் நிருபர்களிடம் பேசுகையில், “நான் எத்தகைய விசாரணையையும் சந்திக்க தயார் என ஏற்கனவே கூறி உள்ளேன். எங்களிடம் மறைப்பதற்கு ஏதுமில்லை” என கூறினார்

Chennai Today News: Sarath Fonseka joined in Srisena’ s party at Srilanka

Leave a Reply