shadow

தனுஷ் ஜோடியாகும் பிரபல நடிகரின் மகள்!

தனுஷ் ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகரின் மகள் நடிக்க இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது

தனுஷ் நடித்து முடித்துள்ள பட்டாஸ் திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது ’கர்ணன்’என்ற படத்தில் நடித்து வருகிறார். மாரிசெல்வராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் தனுஷ் அடுத்து வரிசையாக மூன்று திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ள நிலையில் தற்போது ஒரு ஹிந்திப் படத்தில் நடிக்க உள்ளார். ராஜண்ணா படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரபல நடிகை சாரா அலிகான் நடிக்க உள்ளார். இவர் பிரபல பாலிவுட் நடிகர் சயித் அலிகான் மகள் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படத்தில் அக்ஷய்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது இருப்பினும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *