shadow

சிம்புவின் அடுத்த படத்தின் ஒளிப்பதிவாளர்-எடிட்டர்

சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அழகானவன்’ படத்தின் படுதோல்விக்கு பின்னர் இழந்தை புகழை மீண்டும் பெற சிம்பு தன்னுடைய அடுத்த படத்தின் பணிகளை தொடங்கிவிட்டார். டி.ராஜேந்தர் தயாரிப்பில், யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்த படத்தின் டைட்டில் ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்று கூறப்படுகிறது

இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த படத்தில் 11 முறை தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளதாகவும், அதேபோல் இந்த படத்தின் எடிட்டராக ஆண்டனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Leave a Reply