shadow

santhanamகோச்சடையான் திரைப்படம் வரும் 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. உலகம் முழுவதிலும் உள்ள 3000 தியேட்டர்கள் இதுவரை கோச்சடையானை ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 500 தியேட்டர்கள் புக் ஆகியுள்ளது. இன்னும் பல தியேட்டர்கள் புக் ஆகிக்கொண்டு இருக்கின்றது.

கோச்சடையான் படம் ரிலீஸ் ஆவதால் தமிழில் வெளிவரும் அனைத்து படங்களும் இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. சில படங்கள் ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  மூன்று வருடங்களுக்கு பின்னர் வரும் ரஜினி படம் என்பதால் குறைந்தது ஒரு மாதத்திற்கு அனைத்து தியேட்டர்களிலும் படம் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சந்தானம் முதன்முதலில் நடித்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற திரைப்படத்தை கோச்சடையான் ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் அதாவது மே 16ஆம் தேதியே ரிலீஸ் செய்கிறார். கோச்சடையான் படம் அனிமேஷன் படம் என்பதால் கண்டிப்பாக ஒருவாரத்திற்கு மேல் ஓடாது என்றும், அதனால் தைரியமாக மே 16ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம் என்றும் தயாரிப்பாளரிடம் சந்தானம் கூறியதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Leave a Reply