சந்தானம், ஜி.வி.பிரகாஷூக்கு ஒரே நாயகி

santhanamபிரபல இசையமைப்பாளர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது எம்.ராஜேஷ் இயக்கி வரும் ‘கடவுள் இருக்குறான் குமாரு’, ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் படம் என பிசியாக உள்ள நிலையில் ஸ்ரீக்ரீன் புரடொக்ஷன்ஸ் தயாரிக்கும் ஒரு புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகி தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சந்தானம் நடித்து வரும் சர்வர் சுந்தரம்’ படத்தின் நாயகி வைபவி ஷாந்தில்யா, ஜி.வி.பிரகாஷின் இந்த படத்திலும் நாயகியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் சரத்குமார் இரண்டு வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கவுள்ளார்.

மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கவுள்ளார். சத்யராஜ், சரத்குமார் இருவரும் பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒரே படத்தில் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் சப்போர்ட்டிங் கேரக்டர்களாக தம்பி ராமையா, ரோபோ சங்கர், அருண்காமராஜ் உள்பட பலர் நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *